தற்போதைய செய்திகள்

கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் பணியிடை நீக்கம்

விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்க்ததின் சார்பில் வில்லிபத்திரி கிராமத்தில் பகுதி நேர நியாய கடையும் நடத்தப்பட்டு

எஸ். பாண்டியன்

விருதுநகர் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் குருமூர்த்தி உத்தரவிட்டார்.

விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்க்ததின் சார்பில் வில்லிபத்திரி கிராமத்தில் பகுதி நேர நியாய கடையும் நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி கடையில்  விற்பனையாளர்கள் முறைகேடு செய்து வருவதாக கூட்டுறவு துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் திங்கள்கிழமை அருப்புக்கோட்டை கூட்டுறவு துறை பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இக்குறிப்பிட்டுள்ள கடையில் விற்பனையாளர் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனையாளர் சமுத்திரகனிக்கு ரூ.22,194 வரையில் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சின்னவள்ளிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தின் நிர்வாகம் விற்பனையாளர் சமுத்திரகனியை பணியிடைநீக்கம் செய்ய கூட்டுறவு துறைக்கும் பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில் கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT