தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வேன் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

விருதுநகரில் சவாரி பிடிக்கும் தகராறில் வேன் டிரைவராக  தாக்கியதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சவாரி பிடிக்கும் தகராறில் வேன் டிரைவராக  தாக்கியதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
   விருதுநகர் அருகே அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன்(27). இவர் கச்சேரி சாலையில் மேற்கு காவல் நிலையம் அருகே வாடகை நிறுத்தத்தில் வேன்   வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். அதேபோல், பர்மா காலனியைச் சேர்ந்த ரத்தினம்(30), லட்சுமி காலனியைச் சேர்ந்த சக்தி(31) ஆகியோரும் வாடகை  வேன் நிறுத்தியுள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி சவாரி பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்படுமாம். இதேபோல், வியாழக்கிழமை இரவு இவர்களுக்குள் வேனுக்கு சவாரி பிடிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாம். இதில், ஆத்திரம் அடைந்த ரத்தினம், சக்தி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து நாகராஜனை தாக்கினார்களாம். இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் நாகராஜன் புகார் செய்தார்.
    அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரத்தினம், சக்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான இரண்டு பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

SCROLL FOR NEXT