முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளையங்கோட்டையில் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் போராட்டம்

பிரிமீயத்தின் மீதான சேவை வரியை நீக்க வேண்டும். பாலிசி முதிர்வு மீதான வருமான வரியை நீக்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பணிக்கொடை

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) அலுவலகம் முன்பு முகவர்கள் சமையல் செய்து உண்ணும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

பிரிமீயத்தின் மீதான சேவை வரியை நீக்க வேண்டும். பாலிசி முதிர்வு மீதான வருமான வரியை நீக்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பணிக்கொடை தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். முகவர்களுக்கு ஹெச்.ஆர்.சி.  மற்றும் இ.ஆர்.சி. வழங்கிடும் காப்பீட்டு சட்டம் 1938 பிரிவு 44 சட்டத்தை நீக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். முதன்மை காப்பீட்டு ஆலோசகர்களுக்கு மாத ஊதியம் மற்றும் போக்குவரத்து படி வழங்கிட வேண்டும். முகவர் ஒழுங்குமுறை சட்டம் 1972 இன் முகவர்களுக்கு நன்மை தரும் திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்க கிளைச் செயலர் ப.குமார் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் எஸ்.ஹரிஹரன், எஸ்.முருகன், எஸ்.ஆர்.லட்சுமணன், ஜி.பி.சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல துணைத் தலைவர் ஏ.எஸ்.கணபதி, மூத்த தலைவர் பி.எஸ்.ஜி.சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கிளைத் தலைவர் பி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →