முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 30 வழக்குகளில் ரூ.41.86 லட்சம் வழங்க உத்தரவு

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 30 வழக்குகளில் ரூ.41.86 லட்சம் வழங்க உத்தரவு

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு கட்டடத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.41,86,763 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஆர்.தாரணி, தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம் ஆகியோர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.சாமுவேல் பெஞ்சமின், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.பத்மா, நீதித்துறை நடுவர் கே.கவிதா, ஓய்வு பெற்ற சார்பு நீதிபதி எம்.சந்திரன், வழக்குரைஞர் எஸ்.ராமசுப்பிரமணியன், சமூக நல அலுவலர் எஸ்.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மக்கள் நீதிமன்ற் நடைபெற்றது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வங்கி வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 255 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.41,86,763 வழங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது.

மேலும் வங்கிகளில் நிலுவையில் உள்ள 1155 வராக் கடன் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 157 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1,13,80,457-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் ரூ.13,06,450 உடனடியாக வசூலிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →