ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் சீ.வளர்மதி 4022 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையப் பணிகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையப் பணிகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடக்கும் அறையைச் சுற்றிலும் 4 அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முகவர்கள் நேரடியாகக் கண்காணிக்கும் வகையிலான கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேசைக்கும் ஒரு நுண்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலர், ஒரு உதவியாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து தலா 20 நிமிஷங்களுக்கு ஒரு முறை சுற்றுகளின் முடிவுகள் வெளியாகும் எனவும் பிற்பகல் சுமார் 2 மணிக்கு இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடந்து முடிந்துள்ள முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக- 6232, திமுக- 2010, பா.ஜ., - 140, மார்க்சிஸ்ட் - 20 வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளர் சீ.வளர்மதி 4022 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.