முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவராத்தி விழாவுக்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிவராத்தியன்று இரவு கோயிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டினை

Updated On : 18 பிப்ரவரி, 2015 at 4:57 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிவராத்தியன்று இரவு கோயிலுக்கு சென்ற போது வீட்டின் பூட்டினை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தினை திருடர்கள் திருடி விட்டு தப்பியோடினர்.

லால்குடி அருகேயுள்ள வாளாடி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (67). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்கிழமை இரவு சிவராத்தியன்று அப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு நன்பர்களுடன் சென்று விட்டு அதிகாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் நகை திருட்டுóபபோனது தெரியவந்தது.

Advertisement

இந்த திருட்டு தொடர்பாக லால்குடி போலீஸில் சங்கரன் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.