மனைவியை கல்லால் அடித்து கொலை செய்து விட்டு கணவன் தப்பியோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள மலைக்குடிபட்டியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெள்ளிக்கிழமை மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவன் தப்பிசென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள மலைக்குடிபட்டியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெள்ளிக்கிழமை மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவன் தப்பிசென்றார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் தமிழரசன், மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் அழகுமணி(35). இருவரும் கேரளாவில் ஒரே இடத்தில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த போது ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அழகுமணி சொந்த ஊரான மலைக்குடிபட்டிக்கு வந்து தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்,
இந்நிலையில் கணவர் தமிழரசன் வேலைக்கு சரியாக செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார், அழகுமணி கட்டட வேலைக்கு பக்கத்து ஊரான திருச்சிக்கு சென்று வந்துள்ளார். இதில் தமிழரசனுக்கு அழகுமணி மேல் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த தமிழரசன் அரளை கல்லால் அழகுமணியை தாக்கி கொலை செய்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரிடம் மனைவி வயிற்று வலியால் துடிப்பதாகவும் மாத்திரை வாங்கி வருவதாக கூறிவிட்டு தப்பி சென்றுவிட்டார். தகவலறிந்து வந்த இலுப்பூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி இலுப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் ச. வேலுச்சாமி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தமிழரசனை தேடி வருகின்றனர்.