இளம் பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரியைச் சேர்ந்தவர் குருசாமி மகள் சுமதி (23). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த சின்ன நாகையா நாயக்கர் மகன் நாகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர்
தற்போதைய செய்திகள்இளம் பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரியைச் சேர்ந்தவர் குருசாமி மகள் சுமதி (23). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த சின்ன நாகையா நாயக்கர் மகன் நாகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரியைச் சேர்ந்தவர் குருசாமி மகள் சுமதி (23). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த சின்ன நாகையா நாயக்கர் மகன் நாகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். சுமதி தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து கொண்டு, வளையங்குளத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில் ராஜா என்பவருடன் சுமதிக்கு தவறான பழக்கம் ஏற்பட்டதாம். சனிக்கிழமை வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையாம். ராஜாவுடன் சுமதி சென்றுள்ளதாகவும் அவரை தேடி கண்டு பிடித்த்துத் தர வேண்டும் என்றும், சகோதரி சுந்தரம்மாள் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.