விராலிமலை அருகே நடந்த சாலை விபத்தில் பெண் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மணப்பாறை சாலையில் ஞாயிற்றுக்கிழமை கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மணப்பாறை சாலையில் ஞாயிற்றுக்கிழமை கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்
புதுக்கோட்டை கணேஷ் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி ஏவால்(50) இவரும் இவரது நண்பர்கள் தங்கம்(55) எஸ்தர்(22) ஏஞ்சல் உள்ளிட்ட நான்கு பேர் புதுக்கோட்டையிலிருந்து தேனியில் உள்ள ஒரு தேவாலயம் செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர், காரை மாரிமுத்து ஓட்டி வந்துள்ளார், அப்போது விராலிமலை அருகேயுள்ள சீத்தகால்பட்டி என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் கார் மோதியது,
இதில் பலத்த காயமடைந்த ஏவால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், காயங்களுடன் மற்ற நான்கு பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுகுறித்து விராலிமலை காவல் துணை ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்