ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் நம்பிக்கை மோசடி செய்ததாக கணவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மேரி டயனா தீபிகா (31). இவர் காடனேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் நம்பிக்கை மோசடி செய்ததாக கணவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மேரி டயனா தீபிகா (31). இவர் காடனேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் நம்பிக்கை மோசடி செய்ததாக அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மேரி டயனா தீபிகா (31). இவர் காடனேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் மேலகோபாலபுரம், துரைராஜ் மகன் ஆல்பர்ட்ராஜ் (41) என்பவருக்கும் 16.5.14-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. ஆல்பர்ட்ராஜூக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதாம். மேலும் ஆண்மைக் குறைவு என்று நன்கு தெரிந்தும் அதனை மறைத்து மேரி டயனா தீபிகாவை ஆல்பர்ட்ராஜ் திருமணம் செய்தாராம்.
ஊதாரித்தனமான செலவுகளுக்காக ஆசிரியை மேரி டயனா தீபிகாவின் 10 பவுன் நகைகளை ஆல்பர்ட்ராஜ் வாங்கி அடகு வைத்து செலவு செய்தாராம். மேலும் ஆசிரியை சம்பாதித்து வாங்கி வைத்த 9 பவுன் நகைகள், பணம் ரூ.5.70 லட்சம் ஆகியவற்றையும் ஆல்பர்ட்ராஜ் மோசடி செய்துவிட்டாராம். இவ்வாறு மனதளவில் பெரும் துன்புறுத்தல் கொடுத்து வரும் கணவர் ஆல்பர்ட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேரி டயனா தீபிகா புகார் செய்தார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆல்பர்ட்ராஜை தேடி வருகிறார்கள்.