முகப்பு
தற்போதைய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சக்கர பிரேக் பகுதியில் தீ: கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கௌஹாத்திக்கு சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரப் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும் பிரேக் பகுதியில் உராய்வு

தற்போதைய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சக்கர பிரேக் பகுதியில் தீ: கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கௌஹாத்திக்கு சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரப் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும் பிரேக் பகுதியில் உராய்வு

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:48 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கௌஹாத்திக்கு சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரப் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும் பிரேக் பகுதியில் உராய்வு காரணமாக ஏற்பட்ட தீ காரணமாக புதன்கிழமை கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் அஸ்ஸôம் மாநிலம் கௌஹாத்தி நோக்கி புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து 10 மணி அளவில் கௌஹாத்தி நோக்கி புறப்பட்டது.

இந்த ரயில் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்த போது ரயில் தண்டவாளங்களுக்கு இடையே பரப்பப் பட்டிருந்த கற்கள் மீது இந்த ரயிலின் எஸ்.4 பெட்டியின் சக்கரத்தின் பிரேக் உருளை உரசியிருக்கிறது. இதனால் அந்த ரயில் சக்கரத்தின் பிரேக்கின் மீது இணைக்கப்பட்டிருக்கும் உருளை கருகி அதில் இருந்து தீப்பொறி கிளம்பியுள்ளது. அப்போது ரயில்வே ஊழியர்கள் இதனை கண்டு இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தந்ததை தொடர்ந்து அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 11.30 மணி அளவில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தீயினால் சேதமடைந்த அந்த பிரேக்கின் மீது இணைக்கப் பட்டிருக்கும் உருளையை மாற்றினர். இதனை தொடர்ந்து 40 நிமிடத்திற்கு  பிறகு 12.10 மணியளவில் பழுது நீக்கப்பட்ட ரயில் கௌஹாத்தி நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்ற ரயில்களின் சேவை பாதிக்கப்படவில்லை எனினும், இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →