தற்போதைய செய்திகள்

நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்: இஸ்ரோ விஞ்ஞானி சிவன்

நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இளைய தலைமுறை மாணவ, மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன் கேட்டுக்கொண்டார்.

எஸ். பாண்டியன்

நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இளைய தலைமுறை மாணவ, மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் கண்காட்சி கலையரங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சரவணசங்கர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சி அமைப்பாளர் பேராசிரியர் சுந்தர் வரவேற்புரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து இஸ்ரோ விஞ்ஞானி மேலும் பேசியதாவது: இளைய தலைமுறை மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கண்காட்சியை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பம் உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. அணு மற்றும் வின்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு நாம் சவாலாக விளங்குகிறோம். 150 ஆண்டுகளின் அறிவியல் ஆராய்ச்சியால் ஏற்பட்டுள்ள பலனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம். இன்றைய நாளில் இளைய தலைமுறையினர் அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட பல்வேறு வசதி வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி நவீன தொழில் நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளை, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரவேண்டும் என அவர் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சரவணசங்கர் பேசுகையில், உலகளவில் 10 அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவராக திகழும், வின்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி கே.சிவனால் அறிவியல் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும். உலக அளவில் ஆராய்ச்சி பல்கலைக்கழக வரிசையில், தனியார் பல்கலைக்கழகங்களில் 7 இடத்தில் நம் பல்கலைக்கழகம் உள்ளது பெருமையாகும். இம்முயற்சியில் மேலும் வளர்ச்சி அடைய மாணவ, மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

இக்கண்காட்சியை முன்னிட்டு மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த 200 அரங்களையும், இப்பல்கலைக்கழக மாணவர்களின் 100 அரங்குகளையும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து கட்டுரை, கவிதை போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கலசலிங்கம் பல்கலைக்கழகம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதில், நிறைவாக பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT