பழனிக்கோயிலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டி அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு சிறப்பு பூஜை
பழனி மலைக்கோயிலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டி அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டது.
பழனி மலைக்கோயிலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டி அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பெங்களூரு தீர்ப்பைத் தொடர்ந்து தற்போது வழக்கை சந்தித்து வரும் நிலையில் அவர் மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினர் பல்வேறு பூஜைகளையும், யாகங்களையும் நடத்தி வருகின்றனர். திருக்கோயில்கள் மட்டுமன்றி சர்ச், மசூதிகளிலும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழனி மலைக்கோயிலில் அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு சார்பில் உச்சிக்கால பூஜையின் போது மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஜோதி தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ஜெயபாலன், அரசு வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, சேனாபதி, பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, மாவட்ட பொருளாளர் குமாரசாமி, நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ஹக்கீம் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூஜைகளில் பங்கேற்றனர்.
மலைக்கோயிலில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
இதுகுறித்து மாநில துணை செயலாளர் ஜோதி கூறுகையில், மாநில வழக்கறிஞர் பிரிவு சார்பில் பழனி முருகன் கோயில் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள 108 முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் நடராஜன், எம்ஜிஆர் பேரவை ராஜாமுகமது, பழனி பெரியசாமி, நகர இளைஞரணி தலைவர் சேக்முகமது, நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், மாவட்ட மாணவரணி தலைவர் வீரக்குமார், வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.