முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:50 AM

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடுவது தொடர்பாக வருவாய் துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். இதில், தேர்தல் ஆணையத்தால் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்ட டி.வெங்கடேஷ் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டு பேசுகையில், வாக்காளர் திருத்த முகாமில் வரப்பெற்ற மனுக்கள் அனைத்தும், சரியான முறையில் ஆய்வு செய்யப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், நீக்கம் செய்வது தொடர்பாக வந்த மனுக்கள் மீது முறையாக பட்டியலில் நீக்கப்பட்டியிருக்க வேண்டும்.

   அதேபோல், அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகிற 5-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், வருகிற 25-ம் தேதி வாக்காளர் தினத்தை கொண்டாடவும், அன்றைய நாளில் வாக்காளர் அடையாள அட்டையும் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
   இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, சிவகாசி சார்-ஆட்சியர் அமர்குஷ்வாஹா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.