பழனியில் எறும்பு தின்னி பிடிபட்டது
பழனி சிவகிரிப்பட்டி-சண்முகநதி பைபாஸ் ரோட்டில் இடும்பன் குளமும், அருகிலேயே இடும்பன் கோயிலும் உள்ளது. இந்நிலையில் கோயில் அருகே குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை எறும்பு
பழனி பைபாஸ் ரோட்டில் இடும்பன் கோயில் அருகே எறும்பு தின்னி பிடிபட்டது.
பழனி சிவகிரிப்பட்டி-சண்முகநதி பைபாஸ் ரோட்டில் இடும்பன் குளமும், அருகிலேயே இடும்பன் கோயிலும் உள்ளது. இந்நிலையில் கோயில் அருகே குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை எறும்பு தின்னி ஒன்று குறுக்கும், நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் எறும்பு தின்னியை லாவகமாக பிடித்து நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பிடிபட்ட எறும்பு தின்னி சுமார் மூன்று கிலோ எடையும், இரண்டரை வயதும் உடையதாகும். மருத்துவகுணம் நிறைந்தது என சிலரால் பிடிக்கப்பட்டு கொன்றுவிடப்படுவதால் இந்த இனம் அரிதாகிவரும் இனமாகி விட்டது. அருகிலேயே குளம் மற்றும் புதர்கள் இருப்பதால் இது குடியிருப்பு பகுதிக்குள் வந்திருக்கலாம். சிறிய புழு, பூச்சி, எறும்புகள் இதன் உணவாகும். நீளமான நாக்கை எறும்பு புற்றுக்குள் விட்டு அதை பிடித்து உண்பதால் இதற்கு எறும்பு தின்னி என பெயர் வந்தது. பிடிபட்ட எறும்புதின்னியை தீயணைப்புப்படையினர் வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
பின்னர் இது பழனி பாலாறு பொருந்தலாறு அணை ஜீரோ பாயிண்ட் வனப்பகுதியில் உயிருடன் விடப்பட்டது.