முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு. 13  நாள் வசூல் ஒன்றரை கோடியை தாண்டியது

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் புத்தாண்டு, ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து கடந்த 13 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடர்ந்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 13  நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ஒன்றரை கோடியை தாண்டியது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் புத்தாண்டு, ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து கடந்த 13 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 53 லட்சத்து 31ஆயிரத்து 630 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 330 கிராமும், வெள்ளி 19 ஆயிரத்து 710 கிராமும் கிடைத்தன.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 311 ம் வரப்பெற்றன. இந்த முறை வெள்ளியை கட்டி, கட்டியாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்,  பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், திருக்கோயில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.