முகப்பு
தற்போதைய செய்திகள்

கருவூல கணக்கு துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டட வளாகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:55 AM

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டட வளாகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.லட்சுமணன் தலைமை வகித்தார். இதில், மாநில செயலாளர் எம்.பாலாஜி சிறப்புரை வழங்கினார். இக்கூட்டத்தில், கருவூலத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணிச்சுமையை கருத்திற்கொண்டு அனைத்து அலுவலர்களுக்கும்  20 சதவீதம் கூடுதலாக ஊதியம்  வழங்கவும், புதிய பென்சன் திட்டத்தினை செயல்படுத்த புதிய பணியிடங்களை வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீரமானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவாக மாவட்ட செயலாளர் லியாகத் அலி நன்றி கூறினார்.  கருவூலத்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.