முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக ஊராட்சி செயலாளரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்து மிரட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக ஊராட்சி செயலாளரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்து மிரட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக ஊராட்சி செயலாளரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்து மிரட்டியதாக திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரம் அதிமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் ச.ராஜேந்திரன் (54). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் கு.ஆறுமுகத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மல்லி கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி அருகே ராஜேந்திரன் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது திமுக ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம், ஆறுமுகம் மகன்கள் ராமர், ராஜ்குமார், முத்தையா மகன் குருசாமி, கு.செந்தில் ஆகியோர் உருட்டுக் கட்டை, வீச்சு அரிவாளுடன் வந்து, ராஜேந்திரனை வழிமறித்து அதிமுக ஆட்சி என்று ஆடுகிறீர்களா? ஒழுங்கா இல்லை என்றால் தொலைத்து விடுவோம் என்று கூறி மிரட்டினார்களாம்.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி, மல்லி ஆறுமுகம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →