முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுப் படுகையில் ஏராளமான மணல் திருடியவர் மீது வழக்கு

சிவகாசி உதவி ஆட்சியர் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடுகபட்டி கிராமம், அர்ச்சுனாநதி ஆற்றுப் படுகையில் புலதணிக்கை செய்தனர். அப்போது எஸ்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுப் படுகையில் 10 டிராக்டர்களுக்கு மேல் மணல் திருடி குவித்து வைத்திருந்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

சிவகாசி உதவி ஆட்சியர் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடுகபட்டி கிராமம், அர்ச்சுனாநதி ஆற்றுப் படுகையில் புலதணிக்கை செய்தனர். அப்போது எஸ்.அம்மாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கிழக்கு மற்றும் வடக்குப் பக்கம் மூன்று வெவ்வேறு இடங்களில் சுமார் 10 டிராக்டர்களுக்கு மேல் மணல் திருடி சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வடுகபட்டி, கிராம நிர்வாக அலுவலர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.அம்மாபட்டி, பத்மநாபன் மகன் நாகராஜன் மீது புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகராஜனைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →