தற்போதைய செய்திகள்

ராமேசுவரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் நீராடினர்

ரவிசந்திரன்

ராமேசுவரத்தில் தை அமாவாசையை நாளான செவ்வாய் கிழமை அதிகாலையில் பக்தர்கள் அக்னிதீர்த்தக்கடலில் நீராடி பின்னர்  திருக்கோயிலில் சுவாமி,அம்பாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு செவ்வாய் கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர். உலக புகழ்பெற்ற சிவஸ்தலம் அமைந்த புண்ணிய பூமியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்பனபூஜைகள்,தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்து திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர்.பின்னர் சுவாமி அம்பாள் சன்னதியில்  பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக பகல் முழுவதும்  திருக்கோயில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும்,தீபாரதணை வழிபாடுகளும் நடைபெற்றன. திருக்கோயிலை சுற்றி பக்தர்களின் கூட்டங்கள் வெள்ளம்போல் காணப்பட்டன.பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்டகண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபட்டிருந்தனர்.

திருக்கோயிலை சுற்றி நான்குரத வீதிகள்.அக்னீதீர்த்தகடல் பகுதிகள்,சன்னதிதெருப்பகுதிகள்,திருக்கோயிலின் உள்பிரகாரங்கள் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா மூலம் போலீஸார் கண்காணித்து வந்தனர். சுவாமி சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த திருக்கோயில் சார்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த திருக்கோயிலின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.பக்தர்களின் வசதிகளுக்காக அன்னதானம்,பிரசாதங்கள் உள்பட அனைத்து முன் ஏற்பாடுகளையும் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,உத்தரவின் பேரில் உதவிக்கோட்டமேலாளர் மயில்வாகணன், கணக்கீட்டாளர் சண்முகநாதன், கண்காணிப்பாளர் ராஜங்கம்,ககாரின்ராஜ், திருக்கோயில் அலுவலர்கள் கமலநாதன்,மாரியப்பன்,செல்லம்,குமரேசன், மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT