முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பேருந்துக்குள் அமிலம் கசிவு: 4 பேர் காயம்

ஊட்டியில் இருந்து மார்த்தாண்டத்துக்கு அரசு விரைவுப் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில் ஓட்டுநராக கண்ணனும், நடத்துநராக பிரவீண்குமாரும் பணியில் இருந்தனர். இந்தப்

Updated On : 22 ஜனவரி, 2015 at 5:29 PM
பகிர்:

அரசு விரைவுப் பேருந்தில் பயணி ஒருவர் விதிகளை மீறி பாட்டிலில் எடுத்து வந்த அமிலம் பேருந்துக்குள் கசிந்ததால் நெல்லையில் பரபரப்புஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.

ஊட்டியில் இருந்து மார்த்தாண்டத்துக்கு அரசு விரைவுப் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில் ஓட்டுநராக கண்ணனும், நடத்துநராக பிரவீண்குமாரும் பணியில் இருந்தனர். இந்தப் பேருந்து வியாழக்கிழமை அதிகாலையில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்குப் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, பேருந்தில் பயணிகளின் உடைமைகளை வைக்க அமைக்கப்பட்டிருந்த அலமாரியில் பெரும் புகைமண்டலம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் சிலர் பார்த்தபோது, அங்கு ஒரு பாட்டிலில் ஏதோஒரு வகை அமிலம் இருந்ததும், அது கசிந்து புகைமண்டலம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த அமிலம் இருந்த பாட்டிலை பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீச முயன்றபோது பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் முதலூரைச் சேர்ந்த ஜான்சன் (35), அவரது மனைவி சுதா (33), மகள் ஜெயசீலி (11), அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கீழஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா ஆகியோர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைபெற்றனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது.

Advertisement

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.  பேருந்தில் விதிகளை மீறி அமிலத்தைக் கொண்டு வந்த பயணி யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.