முகப்பு
தற்போதைய செய்திகள்

விசைச்தறி உரிமையாளர்களின் உண்ணாவிரதம் வாபஸ்

மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் அல்லது அதனை அரசே மானியமாக வழங்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கடந்த 17 நாட்களாக

தற்போதைய செய்திகள்

விசைச்தறி உரிமையாளர்களின் உண்ணாவிரதம் வாபஸ்

மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் அல்லது அதனை அரசே மானியமாக வழங்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கடந்த 17 நாட்களாக

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் அல்லது அதனை அரசே மானியமாக வழங்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கடந்த 17 நாட்களாக கோவை, திருப்பூர் பகுதி விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மின் கட்டண உயர்வுக்கு பின் கடந்த இரண்டு மாத மின் கட்டணத்தை கட்டுவதில்லை என்று விசைத்தறி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் மின் கட்டணத்தைச் செலுத்தாத நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.. இதனைக்கண்டித்து  நேற்று முதல் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக இன்று அமைச்சர் வேலுமணி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அப்போது சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தை விசைத்தறி உரிமையாளர்கள் வாபஸ் பெற்றனர். இந்நிலையில் 17 நாட்களாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து  நாளை பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுப்பது என்று தீர்மானித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →