ஸ்ரீவில்லிபுத்தூரில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவுத் தேர்வு
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டரா வளமையத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவுத் தேர்வு
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டரா வளமையத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டரா வளமையத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் அடைவுத் திறனைச் சோதிப்பதற்கான தேர்வு நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் பயனாக மாணவர்கள் கற்றலில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். சொல்வதை எழுதுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசித்தலில் மாணவர்கள் எவ்வாறு திறன் பெற்றுள்ளார்கள் என்பதை சோதிப்பதற்காக இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதம் நடைபெறும் இத் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் மேலும் எவ்வாறு பயிற்சிகள் அளித்து அவர்களை கற்றலில் முழுமை அடையச் செய்யலாம் என்பது குறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 10 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இம் மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழ், கணிதம் மற்றும் ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 8-ம் வகுப்பிற்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் அடைவுத் தேர்வு நடைபெற்றது.
இந்த அடைவுத் தேர்வை ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ந.ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டனர்.