சாலையை கடக்க முயன்ற பெண் மீது பேருந்து மோதி சாவு: மற்றொரு விபத்தில் இளம்பெண் சாவு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கல்லுப்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்ற பெண் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கல்லுப்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்ற பெண் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் இளம்பெண் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமடை அருகே உள்ள சேவைசேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டனர்.
சனிக்கிழமை அதிகாலை பேருந்து திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், கல்லுப்பட்டி என்ற இடத்திற்கு வந்ததும் டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த சேவைசேரியைச் சேர்ந்த சண்முகாத்தாள் வயது 45 என்ற பெண் சிறுநீர் கழிப்பதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது மேல்மருவத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற மற்றொரு ஆம்னி பேருந்து மோதியதில் சண்முகாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
இதேபோல் புத்தானத்தம் அருகே உள்ள கருமலையைச் சேர்ந்தவர் குமார் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை வயது30. சம்பவத்தன்று கருமலை கடைவீதி அருகே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் புத்தானத்தத்தில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி சென்ற பயணிகள் வேன் மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை மணிமேகலை உயிரிழந்தார். விபத்து குறித்து புத்தானத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.