முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் வீட்டில் புகுந்த கோதுமை நாகங்கள் பிடிபட்டது

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியின் பின்புறம் உள்ளது சுப்பிரமணி என்பவர் வீடு.  இந்த வீட்டின் சமையறையில் செவ்வாய்க்கிழமை காலையில் பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்தவர்கள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

பழனியில் இரு வெவ்வேறு வீடுகளில் புகுந்த கோதுமை நாகங்கள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியின் பின்புறம் உள்ளது சுப்பிரமணி என்பவர் வீடு.  இந்த வீட்டின் சமையறையில் செவ்வாய்க்கிழமை காலையில் பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்தவர்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நிபுணர் நடராஜூக்கு தகவல் கொடுத்தனர்.  உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.  சுமார் 6 அடி நீளமுள்ள அந்த பாம்பு கோதுமை நாகம் ரகத்தை சேர்ந்தது ஆகும்.  இதற்கு சுமார் இருபது வயதிருக்கலாம் என நடராஜ் தெரிவித்தார்.  அதே போல அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகே உள்ள சக்திவேல் என்பவர் வீட்டிலும் நாகம் புகுந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கும் சென்று நடராஜால் பாம்பு பிடிக்கப்பட்டது.  அதுவும் கோதுமைநாகம் ரகத்தை சேர்ந்ததாகும்.  இது சுமார் ஐந்தடி நீளமும் சுமார் 12 வயதும் உடையதாக இருந்தது. பிடிபட்ட  இந்த இரு நாகங்களும் வனத்துறை ரேஞ்சர் கணேசன் வசம் ஒப்படைக்கப்பட்டது.  விஷத்தன்மை மிக்க இவை பாலாறு வனப்பகுதியில் உயிருடன் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.