முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோப்பில் யானைக் கூட்டம் புகுந்து மரங்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து மரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து மரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காப்புக் காடு உள்ளது. இங்கு யானைகள், காட்டெருமை, மான், புலி உள்ளிட்ட விலங்குகள் உண்டு. தற்போது வெயிலின் தாக்கம் இப் பகுதியில் அதிகமாக இருப்பதால், யானைகள் கூட்டம் கூட்டமாக மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோப்புகளுக்குள் தண்ணீர் தேடி புகுந்து சேதம் விளைவிக்கின்றன. செவ்வாய்கிழமை இரவு மம்சாபுரத்தைச் சேர்ந்த வாசுதேவன், பெருமாள், கோபால் என்பவர்களுக்குச் சொந்தமான தோப்புக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த மா மரங்கள் மற்றும் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்,

காட்டில் போதுமான தண்ணீர் வசதி வன விலங்களுக்குச் செய்து தரப்படாததால், யானைகள் தரைப் பகுதியை நோக்கி வருகின்றன. தோப்புகளில் புகுந்து யானைகள் மரங்களை வேரோடோ சாய்த்து விடுவதால், அடுத்த முறை காய்களை பறிக்க இயலாது. முற்றிலும் மரங்கள் சேதம் அடைந்து விடுகிறது. வனத்துறையினர், வன விலங்களுக்கு தனியார் தோப்புகளுக்குள் வந்து சேதம் விளைவிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சேதமுற்ற மரங்களுக்குக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →