ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால்....தொழிலாளர் நலத்துறை அதிகாரி எச்சரிக்கை
தலைக்கவசங்களை உற்பத்தி விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, வெள்ளிக்கிழமை மேற்கொண்ட
தலைக்கவசங்களை உற்பத்தி விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறுவோரை போலீஸாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரத்தை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
இதனயைடுத்து தமிழகத்தில் தலைக்கவச விற்பனை சூடு பிடித்தது. தற்போது தலைக்கவசங்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனை பயன்படுத்தி பல மடங்கு அதிகமாக விலை வைத்து விற்பனை செய்வதாகவும், தரமற்ற தலைக்கவசங்கள் கூட ஐஎஸ்ஐ முத்திரையுடன் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார்.
ஆய்வு குறித்து அவர் கூறுகையில், உற்பத்தி (எம்.ஆர்.பி) விலைக்கு அதிகமாக விலை வைத்து விற்பனை செய்வதை தடுக்கவும், பதுக்கல் செய்து கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும் தொழிலாளர் நல ஆணையர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. திருச்சியில் உள்ள அனைத்து தலைக்கவச விற்பனை கடைகளிலும் ஆய்வு தொடரும். ஆய்வின் போது உற்பத்தி விலைக்கு மேல் விலை வைத்து விற்கப்பட்டது தெரியவந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமற்ற மற்றும் கூடுதல் விலைகளுக்கு விற்பனை செய்யப்படும் தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.