ஸ்ரீவில்லிபுத்தூர் குல தெய்வ கோவிலில் அமைச்சர் பன்னீர்செல்வம் வழிபாடு
தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குல தெய்வ கோவிலில் சனிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடத்தினார். மதுரையிலிருந்து
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் குல தெய்வ கோவிலில் அமைச்சர் பன்னீர்செல்வம் வழிபாடு
தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குல தெய்வ கோவிலில் சனிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடத்தினார். மதுரையிலிருந்து
தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குல தெய்வ கோவிலில் சனிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடத்தினார். மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் வழியில் அழகாபுரியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் வரவேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழியே செண்பகத்தோப்பில் உள்ள தனது குல தெய்வமான வனப் பேச்சியம்மன்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர் பின்னர் அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த வடபத்ரசயனர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எஸ்.ஆர்.ராஜவர்மன், ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், கட்சின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், மம்சாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் கட்சியின் நகரச் செயலாளர் ப.அய்யனார், நகர்மன்ற உறுப்பினர்கள் டி.வி.கந்தசாமி, மீராதனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.