தனியார் பேருந்து-கார் மோதல்: பொறியியல் கல்லூரி பேராசிரியர் சாவு: மூவர் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை தேசிய நெடுஞ்சாலை திருப்பத்தில் அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து எதிரே வந்த காரில் மோதியதில் காரை ஓட்டி வந்த பொறியில்
தற்போதைய செய்திகள்தனியார் பேருந்து-கார் மோதல்: பொறியியல் கல்லூரி பேராசிரியர் சாவு: மூவர் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை தேசிய நெடுஞ்சாலை திருப்பத்தில் அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து எதிரே வந்த காரில் மோதியதில் காரை ஓட்டி வந்த பொறியில்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை தேசிய நெடுஞ்சாலை திருப்பத்தில் அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து எதிரே வந்த காரில் மோதியதில் காரை ஓட்டி வந்த பொறியில் கல்லூரி சிவில் துறைத் தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இருவர் மற்றும் பேருந்திலிருந்து குதித்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் பலத்த காயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, அச்சன்புதூர் பழனிச்சாமி என்பவரின் மகன் பாஸ்கரன் (52). இவர் சேலம், மேச்சேரியில் உள்ள காவேரி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் சிவில் துறைத் தலைவராக வேலை செய்து வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டு, திங்கள்கிழமை பகலில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். இவர் காரை ஓட்ட, இவருடன் இவரது தம்பி மும்பையில் உள்ள ஒரு லிப்ட் கம்பெனியில் வேலை செய்யும் தினகரன் (42), திருநெல்வேலியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் முருகையா (48) ஆகியோர் உடன் காரில் அமர்ந்து வந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டியை அடுத்த ஒரு அகலமான திருப்பத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தேனியிலிருந்து ராஜபாளையம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, கார் மீது மோதிவிட்டு கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த உணவு விடுதியில் மோதி நின்றது. பேருந்து தாறுமாறாக செல்வதை அறிந்து பேருந்தில் பயணம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி திரௌபதியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சுந்தரி (55) என்பவர் குதித்துள்ளார். இதில் அவர் பலத்த காயமுற்றார்.
இதில் காரை ஓட்டி வந்த பேராசிரியர் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
பேருந்து கடை மீது மோதியதில் கடை முன்பு நின்று கொண்டிருந்த லட்சுமிநாராயணபுரத்தைச் சேர்ந்த டி.கணேசன் என்பவரின் சைக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேரந்த மணிகண்டபிரபு என்பவரின் பைக் ஆகியவை பலத்த சேதமுற்றது. கடையின் முன்பு ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த சின்னமன்னூரைச் சேரந்த ராஜா என்பவரை கைது செய்தனர்.