இஸ்ரோவின் ஆந்த்ரிக்ஸ் இணையதளத்தை சேதப்படுத்த யாரோ முயற்சி
இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை யாரோ சேதப்படுத்த முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை யாரோ சேதப்படுத்த முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய விண்வெளித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு(இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதோடு விண்கலங்களையும் விண்ணில் செலுத்திவருகிறது. நமது விண்கலங்கள் தவிர வெளிநாடுகளின் விண்கலங்களையும் வணிகரீதியாக விண்ணில் செலுத்தும் தொழிலில் இஸ்ரோ ஈடுபட தொடங்கியுள்ளது. விண்கலங்களை விண்ணில் செலுத்துவதை சந்தைப்படுத்துவதற்காக தனது வணிகப்பிரிவாக இஸ்ரோவால் தொடங்கப்பட்டதே ஆந்த்ரிக்ஸ் நிறுவனம். பெங்களூருவை தலைமையகமாக கொண்டுசெயல்படும் இந்நிறுவனம், இஸ்ரோவின் விண்வெளி சந்தையை விரிவுப்படுத்திவருவதோடு, விண்வெளிசார் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பொருள்களை சந்தைப்படுத்திவருகிறது.
2 நாள்களுக்கு முன்பு இஸ்ரோவின் சார்பில் ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இங்கிலாந்து நாட்டின் 5 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ விண்ணில் செலுத்திய வணிகரீதியிலான செயற்கைக்கோள்கள் இவை ஆகும். இஸ்ரோவின் வணிகவாய்ப்புகளை விரிவாக்கி வரும் இந்நிறுவனம் இந்தியாவின் விண்வெளி பொருளாதாரத்தை மேம்படுத்தும் முக்கியமான பொதுத்துறை நிறுவனமாகும்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்த்ரிக்ஸ் நிறுவன இணையபக்கங்களை முடக்க யாரோ முயற்சி மேற்கொண்டுள்ளது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தை சீராக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.