தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது குறித்து...
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தாலும், மறுபுறம் வெய்யில் வாட்டி வதைக்கிறது.
வேலூரில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கு அடுத்தபடியாக சென்னை (மீனம்பாக்கம்) - 105.98 டிகிரி பாரன்ஹீட்
திருத்தணி - 105.98 டிகிரி பாரன்ஹீட்
மதுரை நகரம் - 102.92 டிகிரி பாரன்ஹீட்
நுங்கம்பாக்கம் - 102.38 டிகிரி பாரன்ஹீட்
பாளையங்கோட்டை - 102.38 டிகிரி பாரன்ஹீட்
திருச்சி - 101.66 டிகிரி பாரன்ஹீட்
மதுரை ஏர்போர்ட் - 101.3 டிகிரி பாரன்ஹீட்
கடலூர் - 100.94 டிகிரி பாரன்ஹீட்
தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Heat hits triple digits in 10 locations across Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.