முகப்பு
தற்போதைய செய்திகள்

மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்துவோரிடம் எச்சரிக்கை தேவை: சித்தராமையா

மதத்தின்பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் அரசியல்சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

Updated On : 12 ஜூலை 2015, 7:21 pm IST
பகிர்:

மதத்தின்பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் அரசியல்சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு, அரண்மனைமைதானத்தில் சனிக்கிழமை தன் சார்பில் நடத்திய ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நாம் அனைவரும் இந்திய திருநாட்டின் மக்கள். சாதி, மதத்தின் அடிப்படையில் நம்மில் எந்த பிரிவினையும் கூடாது. இந்திய திருநாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒரு தாய் மக்களை போல வாழ வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறக்கக்கூடாது. மதம்,சாதிகளின்பேரால் மக்களை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஒருசில அரசியல் சக்திகள் தொடர்ந்து முயற்சித்துவருகின்றன. இது போன்றவர்களின்மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதுநல்லது. இந்து, முஸ்லீம் மதங்களை சேர்ந்த அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்றார் அவர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.