முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:58 AM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நில மோசடி வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித்மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ், லலித்மோடிக்கு உதவிய ராஜஸ்தான் மாநில பாஜக முதல்வர் வசுந்தராராஜே, பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட மகராஷ்ட்ரா மாநில  அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் பதவி விலக வேண்டும்.

வியாபம் ஊழலில் 47 பேர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவராஜ்சிங்சவுகான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தொடர்பாளர் சி.எம். ராகவன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜாஹீர்அப்பாஸ், தாவூத்கான், ஏ.எம். செய்யதுஅலி, முகம்மது ஜமால்ஈசா, டாக்டர் ஜெயச்சந்திரன், தென்காசி அர்ஜூனன், மைக்கேல், டாக்டர் சாமுவேல், ஹைதர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →