முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 125 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லாப் பொருட்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 125 பள்ளிகளிலும் பள்ளி தொடங்கிய திங்கள்கிழமையே அரசின் அனைத்து விலையில்லாப் பொருட்களும் வழங்கப்பட்டுவிட்டதாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் கூறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 125 பள்ளிகளிலும் பள்ளி தொடங்கிய திங்கள்கிழமையே அரசின் அனைத்து விலையில்லாப் பொருட்களும் வழங்கப்பட்டுவிட்டதாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் கூறினார்.

மாணவர்களுக்கான அரசின் விலையில்லாப் பொருட்கள் வழங்கும் பணி தொடக்க விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள விலையில்லா சீருடை, புத்தகம், நோட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிலதா எதிர்கால இந்தியாவை உருவாக்கவுள்ள மாணவர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளார். படிப்பு உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக சிந்தித்து, படிப்புக்குத் தேவையான அனைத்தும் விலையில்லாமல் கொடுத்து வருகிறார்.

நீங்கள் சமூகத்திற்கு பயனுள்ள குடிமக்களாக உருவாக வேண்டும் என்பது மட்டுமே முதல்வரின் ஆசை. உங்கள் மேற்படிபிற்கு பணம் தடைகிடையாது. நீங்கள் சிறப்பாக படித்தால், உங்கள் வறுமையால் படிப்பை தொடராமல் இருக்க வேண்டிய நிலை இராது. உங்கள் உயர் கல்விக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார் அவர்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் பேசுகையில், சரகத்தில் உள்ள 125 பள்ளிகளில் படிக்கும் 11 ஆயிரம் மாணவ மாணவியருக்கு பள்ளி தொடங்கிய அன்றை அனைத்து விலையில்லா பொருட்களும் கொடுக்கப்பட்டுவிட்டது என்றார்.

நிகழ்ச்சியில் ஆசிரியைகள் பா.பாத்திமா ஞானம், ச.பொன்மலர், ந.ரெங்கலதா, வே.ராஜேஸ்வரி, ச.சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →