முகப்பு
தற்போதைய செய்திகள்

குற்றால சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

குற்றால சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய செய்திகள்

குற்றால சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

குற்றால சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

குற்றால சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றலாமானது நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும். இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மிக முக்கியமானது குற்றலாமாகும். இங்கு மூலிகை கலந்த அருவித் தண்ணீரில் நாள் முழுக்க நனைந்து கிடந்தாலும் வெளியேற மனம் வராது.குற்றால சீசன் ஜூன் துவங்கி ஆகஸ்ட் வரை தொடர்ந்து இருக்கும். இந்த சின்னஞ்சிறிய அருவி நகரை நோக்கி தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து மக்கள் படை எடுப்பார்கள்.

குற்றாலத்திற்கு சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் செல்ல முடியும். மதுரையில் இருந்து திருமங்கலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்லும் பேருந்தில் பயணம் செய்தால் சுமார் 5 மணி நேரம் ஆகும். ஏனெனில் இச்சாலை மிகவும் குறுகிய மிக ஆபத்தான வளைவுகள் அதிகம் கொண்டவையாகும்.

அதேநேரத்தில் மதுரையில் இருந்து சிவகாசி ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர்  தென்காசி செங்கோட்டை வரை தினந்தோறும் இரு மார்க்கங்களில் 3 முறை மட்டுமே பயணிகள் ரயிலும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஒருமுறையும் வந்து இயக்கப்பட்டு வருகிறது.பேருந்து கட்டணத்தை பொறுத்தவரை ரயில் கட்டணத்தை விட மிக அதிகமாகும். எனவே ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். சாதாரண நாட்களிலே ரயில்களில் அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழியும்.

குற்றால சீசனை அனுபவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரயில் மூலம் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதனால் ரயில்களில் கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னையில் இருந்த வாரத்தின் இரு நாட்கள் மானாமதுரை வந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்தனர்.

என்ன காரணத்திற்காகவோ அந்த ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது என தெரியவில்லை. போதிய ரயில் வசதி இல்லாததால் குற்றால சீசனுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு வருடமும் சிறப்பு ரயில்கள் இயக்க கோரி ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித அசைவும் ஏற்படவில்லை. தற்போது  திருச்சி காரைக்குடி மானாமதுரை வழியாக விருதுநகர் வரை “டெமோ ரயில்“ இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை இரவு நேரத்தில் செங்கோட்டை வரை இயக்கினால் ரயில்வேக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

மேலும் மானாமதுரை வரை வந்து செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலையும் மீண்டும் செங்கோட்டை வரை இயக்க வேண்டும். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யலாம் என்றும்  சென்னையில் இருந்த செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுதிரண்டு ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →