தஞ்சாவூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கல்லூரி மாணவரை போலீஸôர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் வல்லம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது வீட்டின் பின்புறத்தில் சில நாட்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை இளைஞர் ஒருவர் பாலியல்ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சரவணக்குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது, வல்லம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் எம்.அஜித் (18) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அஜித்தை போலீஸôர் கைது செய்தனர். இவர் வல்லம் அருகேயுள்ள தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.