முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறையில் 351 நூல்களை வெளியிட்டு கின்னஸ் சாதனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து 351 தமிழறிஞர்களால் எழுதப்பெற்று ஒரே நாளில் 351 நூல்களை வெளியிட்டு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து 351 தமிழறிஞர்களால் எழுதப்பெற்று ஒரே நாளில் 351 நூல்களை வெளியிட்டு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை, வைரவிழா காணும் சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து இருநாள் பன்னாட்டு கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கருத்தரங்கில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக மறைந்த-வாழும் தமிழறிஞர்களின் வாழ்வும், பணியும் 351 தமிழறிஞர்களால் எழுதப்பெற்று ஒரே நாளில் 351 நூல்கள் வெளியிடப்பட்டது. 

பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவிற்கு தமிழியல்துறை தலைவர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் செ.மணியன் தலைமை வகித்து 351 நூல்களை வெளியிட்டு பேசினார். நூல்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், பதிவாளர் ஜெ.வசந்தகுமார் மற்றும் பல்கலைக்கழக புல முதல்வர்கள் பெற்றுக்கொண்டனர். நூல்களை பெற்றுக்கொண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் விழா சிறப்புரையாற்றினார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன்  முன்னிலை வகித்துப் பேசினர். மலேசியா உலகத் தமிழாராய்ச்சி தலைவர் டான்ஶ்ரீ த.மாரிமுத்து விழா பேரூரையாற்றினார். மலாயாப் பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல்துறை தலைவர் ஆர்.மோகன்தாஸ், மலேசியா டத்தோ ஹாஜி தஸ்லீம், சென்னை பல்கலைக்கழக தமிழ இணைப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் அரங்க.ராமலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றினர். உதவிப் பேராசிரியர் ப.சு.மூவேந்தன் நன்றி கூறினார். விழாவில் கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி, பதிவாளர் ஜெ.வசந்தகுமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் ராம.சந்திரசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆ.ரகுபதி, சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, குடியரசுத்தலைவரின் தொல்காப்பியர் விருது பெற்ற பேராசிரியர் சை.வே.சண்முகம், பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், பேராசிரியர் ஆறுமுகனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  பன்னாட்டு கருத்தரங்கு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அரங்க.பாரி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ப.சு,மூவேந்தன், முனைவர் ஜா.ராஜா ஆகியோர் செய்துள்ளனர். பெட்டிச்செய்தி தமிழ் மொழி, கணினி தமிழ் ஆகியவை பன்படுத்தப்பட வேண்டும்: கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் சிதம்பரம், ஜூன் 5:மேன்மையும், சிறப்பும் பெற்ற தமிழ்மொழி மற்றும் கணினி தமிழ் உலகளவில் சென்றடைய தமிழறிஞர்களால் பன்படுத்தப்பட வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழியல்துறை பன்னாட்டு கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசியது: இறவாத புகழ் படைத்தது தமிழ். தமிழ், தமிழ் என்று சொன்னால் அமிழ்து என வரும். அந்த அமிழ்து சாப்பிட்ட தமிழறஞர்களுக்கு இறப்பே வராது. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற ஒரு வாியில் அனைத்தும் அடங்கி விடுகிறது. தமிழ் வெறும் மொழி அல்ல. உயிராகவும், உணர்வாகவும் காலம், காலமாக கடந்து வந்துள்ளது. பல்வேறு அறிவியல் உண்மைகள் ஆங்கிலத்தில் மட்டும் இல்லை. அப்போதே திருக்குறளில் அனுவை பிளக்க முடியும், அதில் ஏழு கடல்களையும் அடக்க முடியும் என தெரிவித்துள்ளார். ஆனால் இதை விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டுபிடுதக்துள்ளார்கள். வேறு எந்த மொழிக்கும் தமிழ் மொழி இணையாகாது. தற்போது விஞ்ஞான காலத்திற்கு ஏற்றவாறு ஆங்கில சொற்களுக்கு, புதிய தமிழ் சொற்களை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

துணைவேந்தர் செ.மணியன் பேசியது: கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு முகவரி அளித்த பல்கலைக்கழகமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க பரிந்துரை செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்கலைக்கழக நூல்வெளியீட்டுத்துறை 10 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது 351 நூல்களை வெளியிட்டு நட்சத்திர சாதனை படைத்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை முன்மாதிரியாக திகழ்கிறது என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார். மலேசியா உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து பேசியது: 351 நூல்களை ஒரே நாளில் வெளியிடப்பட்டது சரித்திர நிகழ்வாகும். இது வித்தியாசமான, அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியாகும். மலேசிய தமிழறிஞர்களின் நூல்களும் இதில் இடம் பெற்றுள்ளது பெருமையளிக்கிறது. 351 நூல்களும் ஒரு வரலாற்று பெட்டகங்களாகும்.

இந்த ஆவணங்களை இன்றைய தலைமுறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியை தமிழ் பாரம்பரியத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல்வேறு தமிழ் இலக்கண வல்லூநர்களை உருவாக்கியுள்ளது என டான்ஸ்ரீ த.மாரிமுத்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.