முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்து மக்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு: அர்ஜூன் சம்பத்

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறது என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்.

Updated On : 5 ஜூன், 2015 at 5:34 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:11 AM

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறது என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமியிடம்  பன்னாட்டு குளிர்பானங்கள், துரித  உணவு வகைகளைத் தடை செய்யக் கோரி வெள்ளிóக்கிழமை மனு அளித்த பின்னர் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதே நேரத்தில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், ரசாயன சுவையூட்டும் வேதிப்பொருள், உப்பு கலந்த கோழிக்கறி விற்பனைக்கும், பன்னாட்டு குளிர்பானங்கள், பர்கர், பீசா உள்ளிட்ட துரித உணவு வகைகளைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் மோர், இளநீர், பழரசம் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும்.

Advertisement

சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார் வாசகர் வட்டத்தை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். அதே நேரத்தில் அம்பேத்கர் மையத்தைத் தொடர்ந்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது என்றார் அர்ஜூன் சம்பத்.

அப்போது மாவட்ட அமைப்பாளர் கே.எஸ். ஸ்ரீராம், மாவட்டச் செயலர் ராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.