முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு சென்று திருப்பியவர் உடல் நலக் குறைவால் சாவு

பண்ருட்டி அருகே உள்ள பெருமாள் நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (36) என்பவரை, நெய்வேலியில் கடந்த ஒருவாரத்திற்கு முன் வீட்டில் தனியாக இருந்த மும்தாஜ் பேகம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நெய்வேலி டவுண்சிப் போலீஸார் விசாரச்ணைக்கு அழைத்துச் சென்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

பண்ருட்டி அருகே உள்ள பெருமாள் நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (36) என்பவரை, நெய்வேலியில் கடந்த ஒருவாரத்திற்கு முன் வீட்டில் தனியாக இருந்த மும்தாஜ் பேகம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நெய்வேலி டவுண்சிப் போலீஸார் விசாரச்ணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்குப் பின் வெளிய வந்த அவர் உடல் நலக்குறைவால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்க்க அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து சுப்ரமணியத்தின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தைக் கண்டித்து பி.என்.பாளையம் பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பண்ருட்டி - கடலூர் செல்லும் வழியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →