தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை மூட கிராம மக்கள் எதிர்ப்பு 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை மூடி தரை கீழ்ப்பாலம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை மூடி தரை கீழ்ப்பாலம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தென்பாலை கிராம மக்கள் ஆட்சியர் வே.ராஜாராமனிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

அருப்புக்கோட்டையிலிருந்து-மானாமதுரைக்கு ரயில் தண்டவாளப்பகுதியில் தென்பாலை கிராமம் அருகே ஆள் இல்லாத கிராசிங் உள்ளது. இப்பகுதி மக்கள் ரயில்வே கிராசிங்கை கடந்து தான் திருக்கோயில், மயானம் மற்றும் விளைநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், கிராசிங்கை அடைத்துவிட்டு தரைப்பாலம் அமைப்பதற்கான பணிகளில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த கிராசிங்கை மூடிவிட்டு தரைப்பாலம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. தரைப்பாலம் அமைப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலையிருக்கிறது. இதற்கிடையே மயானத்திற்கும், திருக்கோயில் வழிபாடு நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கிராசிங் பாதையை மூடாமல் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்துடன் கலந்தாய்வு செய்து உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT