முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளையங்கோட்டையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு வழக்கமாக நடத்தப்படும் மே மாதத்தில் நடத்தாப்படாநிலையில், ஜூன் மாதம் பிறந்த பின்பும் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஓராசிரியர் பள்ளியாக இயங்கும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. ஆகவே, ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்க வேண்டும். ஆன்-லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு என்ற சூழலில் கலந்தாய்வு அறையில் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களையும் அனுமதிக்க வேண்டும். கணினி பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர்கள் ஜோசப்மைக்கிள், ஜோசப் ஆகியோர் தலைமை வகித்தனர். பாளையங்கோட்டை கிளைச் செயலர் ஐசக், பொருளாளர் சக்திசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் கிளைச் செயலர் அருள்மரியஜான் வரவேற்றார். மாவட்டச் செயலர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பொதுச் செயலர் போத்திலிங்கம் வாழ்த்திப் பேசினார். பொருளாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →