தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக இளம்பெண் புகார்: 4 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக இளம்பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்கிழமை

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக இளம்பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் என்பவரின் மகள் உமாமகேஸ்வரி(22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இருளாண்டியின் மகன் கணேமூர்த்திக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். அப்போது, 10 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.1.50 லட்சத்திற்கு சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டதாம். இந்நிலையில், 10 சவரன் நகையை கணவர் வாங்கி வைத்துக் கொண்டதோடு, மேலும் நகை வாங்கி வரும்படி கூறி உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தினாராம். இதற்கு அவரது தாய், தந்தை உள்ளிட்டோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து கோபித்துக் கொண்டு உடனே தாய் வீட்டிற்கு வந்தாராம்.

எனவே இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமாமகேஸ்வரி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணேசமூர்த்தி, தந்தை இருளாண்டி, தாயார் முருகேஸ்வரி, சகோதரரி கமலம் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT