என்எல்சி ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த அறிவிப்பு
என்எல்சி நிர்வாகத்திடம் தொமுச மற்றும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த அறிவிப்பு கடிதம் வழங்கினர்ஊதிய மாற்று ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று
என்எல்சி நிர்வாகத்திடம் தொமுச மற்றும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த அறிவிப்பு கடிதம் வழங்கினர்
ஊதிய மாற்று ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் இதர தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 24 மாதங்களாகியும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் ராமு உதயகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலகமாகப் புறப்பட்டு வந்து என்எல்சி தலைமை அலுவலகத்தில் வேலை நிறுத்த அறிவிப்புக் கடிதத்தை வழங்கினர்.
இதே போல இதனைத் தொடர்ந்து தொமுச சங்கத்தைச் சேர்ந்த ராஜவன்னியன் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்புக் கடிதத்தை வழங்கினர்.
பின்னர் செய்தியாளரிடம் ராமு உதயகுமார் கூறியதாவது, 1.1.2012 புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் தொழிற்சங்கம் மூலம் 30 சதவீத ஊதிய உயர்வும், 2 இன்க்ரிமென்டும் கொடுத்திருக்கிறோம்.
கடந்த முறை 800 கோடி ரூபாய் லாபம் ஈட்டிருந்தது. அப்போது 15 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். அப்போது 25% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது 1,579 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இப்போது 12 ஆயிரம் தொழிலாளர்கள்தான் உள்ளனர்.
எனவே, நிர்வாகம் எங்கள் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேச்சுவார்தை நடத்த தயாராக உள்ளோம். இல்லையென்றால் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
தொமுச ராஜவன்னியன் பேசுகையில், 25 சதவீதமும், 2 இன்ரிமென்டும் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் நிர்வாகம் தரப்பில் 10 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு தர ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.