உழவர்கரை தொகுதியில் ரூ.35 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
உழவர்கரை தொகுதியில் ரூ.35.5 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சி அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழை தொடங்கி வைத்தார்.
உழவர்கரை தொகுதியில் ரூ.35.5 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சி அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழை தொடங்கி வைத்தார். ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு கழிவு நீர் வாய்க்கால் மேம்படுத்துதல்.
ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிளாக்குகளில் உட்புற வீதிகளுக்கு தார் சாலை அமைத்தல், விக்டோரியா நகர் தெற்கு வீதி (3-வது வீதி) மேம்படுத்துதல். ஜவகர் நகர் 2-வது குறுக்கு தெரு (மேற்கு) மற்றும் பழமுதிர் சோலை பின்புறம் உள்ள சாலை மேம்படுத்துதல் ஆகிய மேற்கண்ட நான்கு பணிகளுக்கு ரூ.35.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜையை பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் எஸ். குணசேகரன், உதவி பொறியாளர் டி. கலியவரதன், இளநிலை பொறியாளர் டி. சிவக்குமார் மற்றும் ஊர் பிரமுகர்கள் கோபி, பழனி, கோவிந்தசாமி, கணபதி ரெட்டியார், வெங்கடேஷ், சுப்ரமணியம், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.