புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் வெள்ளிக்கிழமை லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் வெள்ளிக்கிழமை லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில பாஜக பொதுச் செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
எல்கேஜி சேர்க்கைக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3லட்சம் வரை பெற்றோரிடம் பணம் வசூல் செய்யும் பள்ளிகளிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும். கல்வி என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும். தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக செயல்படுவதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.