முகப்பு
தற்போதைய செய்திகள்

கடனாநதி, கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் கடனாநதி, ராமநதி, அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் கடனாநதி, ராமநதி, அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 17 மி.மீ, சேர்வலாறு அணையில் 7 மி.மீ, கடனாநதி அணையில் 4 மி.மீ, ராமநதி அணையில் 7 மி.மீ, கருப்பாநதி அணையில் 14 மி.மீ, குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தலா 9 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 40 மி.மீ, தென்காசியில் 6 மி.மீ, ராதாபுரத்தில் 7 மி.மீ, ஆய்க்குடியில் 8.2 மி.மீ, செங்கோட்டையில் 5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 903.64 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 6 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 164 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 36 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.60 அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனம் குடிநீர் தேவைக்கு 1052.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 78.35 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.75 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 2.40 அடி உயர்ந்து 53.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 43.50 அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 43.58 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 14.74 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 45.25 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 27 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.66 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 8 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →