முகப்பு
தற்போதைய செய்திகள்

பேட்டை வாய்த்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் சாவு

திருச்சி பேட்டைவாய்த்தலை அருகே சனிக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 21 ஜூன், 2015 at 3:54 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:46 AM

திருச்சி பேட்டைவாய்த்தலை அருகே சனிக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியிலிருந்து குளித்தலைக்கு ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு ஆண்கள்,ஒரு பெண் என 3 பேர் சென்று கொண்டிருந்தனர். சிறுகமணி அருகே சென்ற போது, பின்னால் வந்த ஆம்னி வேன் அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது உரசி விட்டுச் சென்றது. இதில் நிலைத்தடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர்.அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த பேட்டைவாய்த்தலை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

மேலும் இறந்தவர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையில்,அவர் குளித்தலை,தெற்கு மலைக்கோட்டையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பதும்,அவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மற்ற இருவரின் அடையாளம் தெரியவில்லை.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.