ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தல்காரர்களுக்கு உறுதுணையாக இருந்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் விஷ்வநாதன்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தல்காரர்களுக்கு உறுதுணையாக இருந்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் விஷ்வநாதன்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் கடத்தல்காரர்களுக்கு உறுதுணையாக இருந்த வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் விஷ்வநாதன் செவ்வாய்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வத்திராயிருப்பு, மேலப்பாளையம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஷ்வநாதன் (47).இவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இப் பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையர்களுக்கு இவர் உறுதுணையாக இருந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் சென்ற போலீஸார் நேரிடையாக பார்த்துள்ளனர். இந்த அறிக்கையின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், வருவாய்துறையினர் கொடுத்த புகார் உள்ளிட்டவற்றின் பேரில் நடைபெற்ற துறை ரீதியான விசாரணையிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள விஷ்வநாதன், மது குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் மனைவி பூமாதேவி (41) தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், திங்கள்கிழமை இரவு விஷ மாத்திரைகளை தின்றுள்ளார். செவ்வாய்கிழமை காலை உயிரிழந்த நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.
இது குறித்து மனைவி பூமாதேவி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.