தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி 3 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு கீழே தள்ளி காயம் ஏற்படுத்தி விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு கீழே தள்ளி காயம் ஏற்படுத்தி விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ஜெயலட்சுமி(32). இவர் செவ்வாய்கிழமை காலையில் அருகில் உள்ள அரவை மில்லிற்கு மாசல் பொடி அரைப்பதற்காக சாலையில் நடந்து சென்றாராம். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்து 25 மதிப்புள்ள மர்ம நபர் இளைஞர் ஒருவர் வழிமறித்தாராம்.

அப்போது, எதிர்பாரத நேரத்திற்குள் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையையும் பறித்துள்ளார். அப்போது, சத்தம் போட்டு உதவிக்கு ஆள்களை அழைப்பதற்குள் ஜெயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு வேகமாக வாகனத்தில் விருதுநகர் சாலையில் தப்பியோடினாராம். உடனே காயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு  விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT