அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு
தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து
தற்போதைய செய்திகள்அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு
தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து
தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடக்கு கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருபவர் அருணாச்சலம் மகன் கரியப்பா. இவர் மீது இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊரில் நடைபெற்ற ஒரு பிரச்னை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கு சாட்சியாக இதே இடத்தைச் சேர்ந்த அதிமுக கிளைக்கழக துணைச் செயலாளர் இ.கருப்பசாமி (32) உள்ளார்.
செவ்வாய்கிழமை இரவு ஊரில் உள்ள ஒரு பாலம் அருகே வந்து கொண்டிருந்த கருப்பசாமியை, கரியப்பா வழிமறித்து, குறிப்பிட்ட வழக்கில் தனக்கு எதிராக சாட்சி கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனக்கு எதிராகக் கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினாராம்.
இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் கரியப்பாவைத் தேடி வருகிறார்கள்.